நடிகர் அருண் விஜய் மாமனார் மரணம்! தொடர்ச்சியாக அருண் விஜய் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்!

நடிகர் அருண் விஜய் மாமனார் மரணம்! தொடர்ச்சியாக அருண் விஜய் படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர்!

Update: 2021-04-27 12:14 GMT

 

நடிகர் அருண் விஜய் குடும்பத்தில் நேர்ந்துள்ள மரண சம்பவம் அவருடைய குடும்பத்தையும் தமிழ் திரையுலகையும் கண்ணீரில் ஆழ்த்தியுள்ளது. 

தமிழ் சினிமாவில் 2ஆவது இன்னிங்ஸில் தொடர்ந்து சிக்ஸர்களாக அடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவருடைய நடிப்பில் வெளியான வா டீல், மாஞ்சா வேலு, மலை மலை, தடையறத்தாக்க உள்ளிட்ட திரைப்படங்களை பாதர் டச் என்டர்டெயின்மென்ட் என்ற நிறுவனத்தின் மூலமாக தயாரித்தவர் டாக்டர் என் எஸ் மோகன். இவர் நடிகர் அருண் விஜய்யின் மாமனாருமாவார்.

அருண் விஜய் மீண்டும் திரைப்படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக உயர்வதற்கு இவர் முக்கிய காரணமாக இருந்துள்ளார் என்று கூறலாம். இந்த நிலையில் டாக்டர் என் எஸ் மோகன் உயிரிழந்துள்ளார் என்ற செய்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

68 வயதாகும் மோகனுக்கு திடீரென மூச்சு திணறல் பிரச்னையால் அவதிப்பட்டு வந்தார்.இதற்காக சிகிச்சை பெற்றுவந்த என்.எஸ்.மோகன் இன்று காலமானார்.இவரது மறைவு திரையுலகிலும் அருண் விஜய் குடும்பத்திலும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திரைபிரபலங்கள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Tags:    

Similar News