#BREAKING மனைவியை பிரிந்தார் நடிகர் தனுஷ்!!

#BREAKING மனைவியை பிரிந்தார் நடிகர் தனுஷ்!!

Update: 2022-01-17 23:33 GMT

18 வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவி ஐஷ்வர்யா ஆகிய இருவரும் பிரிந்துள்ளனர். இதனை தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், 18 வருட காலமாக நண்பர்களாக, இணையராக, பெற்றோராக, நலம் விரும்பிகளாக இருந்ததாகவும், இந்த பயணம் புரிதலுடனும், அனுசரிப்புடனும், வளர்ச்சியுடனும் இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

இன்று இருவரும் வெவ்வேறு பாதைகளில் நிற்பதாகவும், அதனால் இருவரும் பிரிந்து வாழ முடிவு செய்திருப்பதாகவும் தனுஷ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  மேலும், இதனை தனிமனிதர்களாக தங்களை இன்னும் புரிந்து கொள்ள பயன்படுத்திக் கொள்ள உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அதனால் தங்கள் முடிவுக்கு மதிப்பளித்து, தனியுரிமையுடன் தாங்கள் இதனை கையாள ஒத்துழைப்பு அளிக்கும்படி அனைவரையும் தனுஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஓம் நமசிவாய என்றும் தனுஷ் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.


newstm.in

Similar News