நடிகர் சிம்பு ஆஸ்பத்திரியில் அட்மிட்.. ரசிகர்கள் பிரார்த்தனை..!
நடிகர் சிம்பு ஆஸ்பத்திரியில் அட்மிட்.. ரசிகர்கள் பிரார்த்தனை..!
திடீர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நடிகர் சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
நடிகர் சிம்பு நடிப்பில் ‘மாநாடு’ திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. அடுத்ததாக, ‘வெந்து தணிந்தது காடு’, ‘பத்துதல’, ‘கொரோனா குமார்’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களை முடித்த பிறகு ராம் இயக்கத்திலும் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில், இன்று காய்ச்சல் காரணமாக சிம்பு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளது.
சிம்புவுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் சிம்பு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என பிரார்த்தனை செய்து வருகின்றனர்.