ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் பழைய காதலைப் பற்றி பேசிய நடிகர்!!

ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் பழைய காதலைப் பற்றி பேசிய நடிகர்!!

Update: 2022-02-01 10:34 GMT

ஐஸ்வர்யாவின் பழைய காதல் கதைகளை பற்றி பேசிய நடிகருக்கு ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

18 ஆண்டு கால திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக தனுஷ், ஐஷ்வர்யா ஆகிய இருவரும் தெரிவித்தது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர்களை பேசி சமாதானப்படுத்தும் நோக்கில் அவர்களது குடும்பத்தார் ஈடுபட்டு வருகின்றனர்.

இது ஒருபுறம் இருக்க, பிரபல நடிகரும் பத்திரிக்கையாளருமான பயில்வான் ரங்கநாதன் இவர்களை பற்றி பல கருத்துக்களை கூறி சர்ச்சையை கிளப்பிவருகிறார்.தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா பிரிந்ததற்கு பல காரணங்கள் இருப்பதாக கூறிவரும் இவர் சமீபத்தில் ஐஸ்வர்யாவின் பழைய காதலை பற்ற பேசியுள்ளார்

இதனைக்கேட்ட ரசிகர்கள் தற்போது இருக்கும் சூழலில் இதுபோன்ற கருத்துக்கள் தேவைதானா என அவரை கேட்டு வருகின்றனர். அவர்களுக்கே திருமணம் ஆகி 18 ஆண்டு காலம் ஆகிவிட்டது.

மேலும் இந்த பழைய காதல் கதையெல்லாம் 20 ஆண்டுக்கு முன்பு நடந்தது. இதை தற்போது பேசுவது சரியா என ரசிகர்கள் பயில்வான் ரங்கநாதனை கேட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ஐஸ்வர்யா தான் இயக்கவிருக்கும் ஆல்பம் பாடல் சம்மந்தமாக தயாரிப்பு நிறுவனத்துடன் ஹைதராபாத்தில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறார்.

தனுஷ் வாத்தி படப்பிடிப்பிலிருந்து தற்போது ஓய்வு எடுத்துக்கொண்டு சென்னையில் தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Similar News