நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி!!
நடிகர் வடிவேலுக்கு கொரோனா தொற்று உறுதி!!
நடிகர் வடிவேலுவுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்னையால் வடிவேலுவுக்கு தயாரிப்பாளர் சங்கம் ரெட் கார்டு கொடுத்திருந்தது. இதனால் அவர் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்தார். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு தடை நீக்கப்பட்டது.
இதையடுத்து இயக்குநர் சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்ற படத்தில் வடிவேலு நடிக்க தொடங்கினார். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. சில வாரங்களுக்கு முன்பு படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியானது.
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் இசையமைப்பு வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறது. படக்குழுவினருடன் லண்டன் சென்றிருந்த வடிவேலு 10 நாட்களுக்கும் மேலாக அங்கு தங்கியிருந்தார். இதையடுத்து இரண்டு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து சென்னை திரும்பியுள்ளார்.
இங்கு வந்ததும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். தற்போது அவருக்கு தொற்று உறுதியாகியிருக்கிறது. இதையடுத்து அவர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
newstm.in