நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்!

நடிகர் விவேக் வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் சொன்ன நடிகர் விஜய்!

Update: 2021-04-26 17:46 GMT

தமிழ் திரையுலகை தமது நகைச்சுவையால்  சிரிக்க வைத்ததுடன் சிந்திக்கவும் வைத்தவர்  சின்ன கலைவாணர் விவேக் .இவர்  ஏப்ரல்  16ம் தேதி திடீர் மாரடைப்பு காரணமாக சென்னையில், உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிரிழந்தார்.

திரையுலக பிரபலங்கள், நண்பர்கள் மட்டுமல்ல அவரது ஆயிரக்கணக்கான ரசிகர்களும் நேரில் விவேக்கிற்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.  விவேக் மரணம் நிகழ்ந்த தருணத்தில் நடிகர் விஜய் படப்பிடிப்பிறாக ஜார்ஜியா நாட்டிற்கு சென்றிருந்தார். இதனால் அவரால் விவேக்கின் இறுதிச்சடங்கில் பங்கேற்க முடியவில்லை.தற்போது அவர் , ஜார்ஜியாவில் இருந்து சென்னை திரும்பியுள்ளார். உடனடியாக  மறைந்த நடிகர் விவேக்கின் வீட்டிற்கு சென்று நடிகர் விவேக்கின் குடும்பத்தினரை சந்தித்து  தமது இரங்கல்களை பதிவு செய்துள்ளார். 

நடிகர் விஜய்யுடன், நடிகர் விவேக் பிகில், தமிழன், குருவி, குஷி, ப்ரியமானவளே, திருமலை, ஆதி, யூத், வேலையில்லா பட்டதாரி  என ஏராளமான படங்களில் இணைந்து பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News