நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை; பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி..!
நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை; பரிசீலிப்பதாக முதல்வர் உறுதி..!
‘மாஸ்டர்’ திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்த விஜய் சேதுபதி, தற்போது கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
மேலும், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா மற்றும் சமந்தாவுடன் இணைந்து ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற படத்தில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தொடங்கியது. மேலும் படத்தின் 90 சதவீத காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டன.
இதனிடையே, ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை தற்போது புதுச்சேரியில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தொடங்கியுள்ளார். அதில் நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்டோரின் காட்சிகள் படமாக்கப்படுகிறது எனக் கூறப்படுகிறது.
இதனால், சிறிய முதலீட்டில் தயாராகும் படங்கள் பாதிக்கப்படும் என்பதால் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதல்வர் ரங்கசாமி தெரிவித்ததாக கூறப்படுகிறது.