நடிகர் விஷாலின் சக்ரா படம் வெளியிட தடை !!

நடிகர் விஷாலின் சக்ரா படம் வெளியிட தடை !!

Update: 2021-02-17 19:34 GMT

தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை கதாநாயகனாக வலம் வருபவர் நடிகர் விஷால் அவரின் அடுத்த படம் அறிமுக இயக்குநர் எம்எஸ் ஆனந்தன் இயக்கத்தில்  உருவாகியுள்ளது.  விஷாலின் சொந்த படமான இந்த படத்தின் பெயர்  'சக்ரா'. இந்த படத்தில் ஷ்ரத்தா ஶ்ரீநாத், ரெஜினா கெசண்ட்ரா ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இப்படம் பிப்ரவரி 19 ரிலீசாகும் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் நடிகர் விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிட தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடியாக  உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த படத்தின் மீது வழக்கு தொடுக்கப்பட்டதன் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் ஒப்பந்தம் செய்த கதையை விஷாலை வைத்து படமாக்கியுள்ளதாக இயக்குனருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மனுவுக்கு பதிலளிக்கும்படி நடிகர் விஷாலுக்கும்,  இயக்குனர் ஆனந்தனுக்கும் தனித்தனியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.  

ஏற்கனவே 2020  மே மாத ரிலீசுக்காக தேதி குறிக்கப்பட்ட நிலையில் கொரோனா காரணமாக ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த புதிய பிரச்சனை தலை தூக்கியுள்ளது.

Tags:    

Similar News