பிரபல இயக்குநருடன் நடிகை அனுஷ்கா திருமணம் ?
பிரபல இயக்குநருடன் நடிகை அனுஷ்கா திருமணம் ?
பிரபல நடிகை அனுஷ்கா திரைப்பட இயக்குநர் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை அனுஷ்கா. தமிழில் ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். அதோடு அருந்ததி, ருத்ரமாதேவி என பெண்ணை முக்கியத்துவம் படுத்திய கதைகளில் நடித்தார்.
பாகுபலி மற்றும் பாகுபலி 2 படங்களில் நடித்து ரசிகர்களின் மனதை மிகவும் கவர்ந்தார். ஆனால் அதன்பின்னர் அவருக்கு படவாய்ப்புகள் இல்லை. தற்போது 39 வயதாகும் அனுஷ்கா தன்னுடன் நடித்த பிரபாஸுடன் காதல் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. இருவரும் இதை ஏற்கவும் இல்லை, மறுக்கவும் இல்லை. அப்படியே பேச்சு பேச்சாகவே போனது.
இதையடுத்து ஐதராபாத்தை சேர்ந்த தொழிலதிபரை மணக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதோடு தென்னிந்திய அணி ஒன்றுக்காக ரஞ்சி போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர் ஒருவரை அனுஷ்கா காதலிப்பதாகவும் தகவல் பரவியது. ஆனால் நடிகை அனுஷ்கா மறுத்தார். எனக்கு திருமணம் முடிவானதும் கண்டிப்பாக அனைவருக்கும் தெரிவிப்பேன் என ஒரே பதிலில் அனைவரையும் அமைதிப்படுத்தினார்.
இந்நிலையில் தற்போது அவர் தெலுங்கு இயக்குநர் ஒருவரை திருமணம் செய்துக் கொள்ளவிருப்பதாக செய்திகள் வலம் வருகின்றன. எனினும் இது தொடர்பாக எவ்வித உறுதியான தகவல்களும் வெளிவரவில்லை.
newstm.in