புது வீட்டில் ஆண் நண்பருடன் நடிகை பாவனி... அப்போ அமீரின் முத்தம்.. அந்த அழுகை?

புது வீட்டில் ஆண் நண்பருடன் நடிகை பாவனி... அப்போ அமீரின் முத்தம்.. அந்த அழுகை?

Update: 2022-01-22 09:17 GMT

நடிகை பாவனி ரெட்டி புதிய விட்டில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தெலுங்கு சின்னத்திரை மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை பாவனி ரெட்டி. தெலுங்கில் ஒரு சில படங்களில் துணை நடிகையாகவும் இவர்  நடித்துள்ளார். தமிழில் சின்னத்தம்பி, ரெட்டை வால் குருவி, ராசாத்தி என பல சீரியல்களில் நடித்துள்ளார்.

நடிகை பாவனி, தெலுங்கு நடிகர் பிரதீப் குமார் என்பவருடன் டேட்டிங்கில் இருந்தார். 2016ஆம் ஆண்டு தமிழ் சீரியலான பாசமலர் சீரியலில் இருவரும் இணைந்து நடித்தனர். அவரை தான் திருமணம் செய்வார் என பரவலாக பேசப்பட்ட நிலையில், அதேபோன்று 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், திருமணம் முடிந்த மூன்று மாதத்தில் அதாவது மே மாதம் பிரதீப் குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் பெரும் சோகத்தில் மூழ்கிய நடிகை பாவனி ரெட்டி, சில மாதங்கள் நடிப்பில் இருந்து விலகி இருந்தார். பின்னர் உடல் அளவிலும் மனதளவிலும் தன்னை தேற்றிக் கொண்டு மீண்டும் நடிக்க தொடங்கினார்.

தெலுங்கில் வெளியான படம் ஒன்றில் படுக்கையறை காட்சிகளில் நடித்திருந்தார். அந்த காட்சிகள் இணையத்தில் லீக்கானதை பார்த்த ரசிகர்கள், சீரியலில் குடும்ப குத்துவிளக்காய் நடிக்கும் பாவனி ரெட்டியா இப்படி என அதிர்ச்சியை வெளிப்படுத்தினர். இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் பங்கேற்றார் பாவனி ரெட்டி.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான அபினய் வட்டியுடன் நெருக்கமாக பழகினார் பாவனி. தனக்கான வேலைகளுக்கெல்லாம் அவரை பயன்படுத்திக் கொண்ட பாவனி அவர் தன்னிடம் பழகும் விதம் தனக்கு பிடிக்கவில்லை என கூறினார்.

பின்னர் அபினய்யை தொடர்ந்து மற்றொரு போட்டியாளரான அமீரிடமும் நெருக்கமாக இருந்தார். ஒரு கட்டத்தில் அமீர் தனது காதலை வெளிப்படுத்தியப்போது, எவ்வித எதிர்ப்பும் கண்டிப்பும் காட்டாமல் இருந்தார் பாவனி ரெட்டி பழகி வந்தார். அமீர் முத்தம் கொடுத்த போதும் எதிர்ப்பு தெரிவிக்காமல் இருந்தார்.

இந்நிலையில் பாவனி ரெட்டி தனது மற்றொரு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, தனது புதிய ஆண் நண்பருடன் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் பாவனி. ஏற்கனவே பாவனிக்கு இரண்டாவது திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், கடைசி நேரத்தில் நின்றதாக குடும்பத்தினர் விளக்கம் அளித்தனர்.

இந்நிலையில் ஆண் நண்பருடன் பாவனி இருக்கும் போட்டோவை பார்த்த ரசிகர்கள் அமீருக்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்றும் பிக்பாஸ் வீட்டில் அழுததெல்லாம் பொய்யா என்றும் கேட்டு வருகின்றனர்.


newstm.in
 

Tags:    

Similar News