நடிகை ஹன்சிகா வீட்டில் விசேஷம்- ஏற்பாடுகள் தீவிரம்..!

நடிகை ஹன்சிகா வீட்டில் விசேஷம்- ஏற்பாடுகள் தீவிரம்..!

Update: 2021-03-12 12:10 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஹன்சிகா வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. இதனால் அவருடைய வீடே கோலாகலமாக உள்ளது.

இந்தியில் குழந்தை நட்சத்திரமாக சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடித்து வந்த ஹன்சிகா, 2004-ம் ஆண்டு தெலுங்கில் வெளியான ‘தேசமுத்ரூ’ என்கிற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். அந்தாண்டில் சிறந்த புதுமுக நடிகைக்கான ஃப்லிம்பேர் விருது அவருக்கு கிடைத்தது.

தமிழில் 2010-ம் ஆண்டு வெளியான ‘மாப்பிள்ளை’ படத்தில் அறிமுகமானார். அதை தொடந்து குறுகிய காலத்திலேயே விஜய், தனுஷ், சூர்யா, சிம்பு, ஜெயம் ரவி பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தார். தமிழில் இவர் நடித்த பெரும்பாலான படங்களும் ஹிட் என்பது கவனிக்கத்தக்கது.தற்போது இவர் நடித்துள்ள 50-வது படமான ‘மகா’ ரிலீஸுக்கு தயாராகவுள்ளது. மேலும் இவர் கன்னடம், இந்தி, மலையாளம் போன்ற் பிறமொழி படங்களிலும் நடித்துள்ளார். ஹன்சிகாவுக்கு 32 வயதில் ஒரு அண்ணன் இருக்கிறார். அவருடைய பெயர் பிரசாந்த் மோத்வானி.

இவருக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவருடைய திருமணம் வரும் 20-ம் தேதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த திருமணத்தை பிரமாண்டமாக நடத்த அப்பகுதியில் உள்ள அரண்மனையை ஹன்சிகா குடும்பத்தினர் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

முழுக்க முழுக்க ராஜஸ்தான் மாநிலம் முறைப்படி நடைபெறும் இந்த திருமணம், 2 நாட்கள் கொண்டாட்டமாக நடக்கவுள்ளது. இதற்காக ஹன்சிகா வீடு மற்றும் திருமணம் நடைபெறவுள்ள் பகுதி முழுக்க விழாக்கோலம் பூண்டுள்ளது. இந்த திருமணத்தில் பங்கேற்க திரைத்துறையில் உள்ள தன்னுடைய நெருங்கிய நண்பர்களுக்கு ஹன்சிகா அழைப்பு விடுத்துள்ளார். 

Tags:    

Similar News