நடிகை கங்கனா ரனாவத் ட்வீட் நீக்கம் ! ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

நடிகை கங்கனா ரனாவத் ட்வீட் நீக்கம் ! ட்விட்டர் அதிரடி நடவடிக்கை!

Update: 2021-02-04 19:50 GMT

டெல்லி விவசாயிகளின் போராட்டத்தை கொச்சைப்படுத்தியதாக கூறி நடிகை கங்கனா ரனாவத் ட்வீட்களை ட்விட்டர் நிர்வாகம் அதிரடியாக நீக்கியுள்ளது.

மத்தியஸ பாஜக அரசு புதிய 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. அந்த 3 சட்டங்களையும் திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் கடந்த 60 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 

டெல்லியில், குடியரசு தினம் அன்று விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில், பயங்கர வன்முறை வெடித்தது.  முகர்பா சவுக், காசிப்பூர், ஐடிஓ, சீமாபூரி, நங்லோய் டி பாயின்ட், டிக்ரி எல்லை, செங்கோட்டை பகுதிகளில் மிகப்பெரகிய கலவரம் மூண்டது. போராட்டக்காரக்கள் செங்கோட்டையில் ஏறி, விவசாய சங்க கொடியை ஏற்றி, ஜிந்தாபாத் என முழக்கமிட்டனர்.  

டெல்லியில் பெரும் கலவரம் வெடித்தை அடுத்து அங்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனிடையே, போலீசார் - விவசாயிகள் மோதலில் விவசாயி ஒருவர் உயிரிழந்தார். அவரை போலீசார் தான்  கொன்றதாக விவசாயிகளும், இல்லை இல்லை அவர் டிராக்டர் மோதிதான் உயிரிழந்தார் என்றும் போலீசாரும் மாறிமாறி குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர்.


மேலும், டெல்லியில் நடைபெற்ற வன்முறையில் 8 பேருந்துகள் மற்றும் 17 தனியார் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 86 போலீசார் காயமடைந்துள்ளனர். வன்முறை தொடர்பாக போலீசார் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு, டெல்லியில் முக்கிய இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டு, உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்நிலையில், டெல்லியில் போராடும் விவசாயிகளை தீவிரவாதிகள் என்றும் இடைத்தரகர்கள் என்றும் தேசிய விரோதிகள் என்றும் நடிகை கங்கனா ரனாவத் தொடர்ந்து அவதூறு பரப்பி வந்தார். அவரது கருத்து, வெறுப்பு பிரச்சாரம் என கூறி அதனை ட்விட்டர் நிர்வாகம் நீக்கியுள்ளது.

இந்நிலையில் “ட்விட்டர் விதிகளை மீறும் வகையிலான ட்வீட்களின் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம் ” எனக் குறிப்பிட்டு கங்கனா பதிவிட்ட இரு ட்வீட்களை ட்விட்டர் தளம் நீக்கி உள்ளது. இதுபோன்று வெறுப்பு பிரச்சாரம் மேற்கொண்ட பலரது கணக்குகளையும் ட்விட்டர் நிர்வாகம் முடங்கியுள்ளது.

ஆனால், கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்த பலரது கணக்குகளை ட்விட்டர் நிர்வாகம் முடக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News