நான் எல்லாம் அப்பவே அப்படி... நடிகை குஷ்பு வெளியிட்ட வைரல் போட்டோ!!
நான் எல்லாம் அப்பவே அப்படி... நடிகை குஷ்பு வெளியிட்ட வைரல் போட்டோ!!
நடிகை குஷ்பு 1980 களில் குழந்தை நட்சத்திரமாக தன் திரைப்பட வாழ்க்கையைத் தொடங்கினார். 1989 ஆம் ஆண்டு வருஷம் 16 என்ற தமிழ்த் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். 1990களில் தமிழ்த் திரைப்பட உலகின் முன்னணி கதாநாயகியாகத் திகழ்ந்தார்.
கன்னடம், மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களிலும் நடித்தார். பின்னர் திரைப்பட இயக்குனர் சுந்தர் சி.யை மணந்தார். தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாகவும் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
தன் கணவர் சுந்தர். சி கதாநாயகனாக நடிக்கும் படங்களை “அவ்னி சினிமாக்ஸ்” என்ற படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் அனைவரும் வீட்டில் இருப்பதால் பலரும் தங்கள் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், நடிகை குஷ்பு சிறுமியாக இருந்த தனது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் சிறு வயதிலும் நீங்கள் அழகாகவே இருக்கிறீர்கள் என பதிவிட்டு வருகின்றனர்.
Newstm.in