கைதாகிறாரா நடிகை மீரா மிதுன்? 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை !!
கைதாகிறாரா நடிகை மீரா மிதுன்? 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த காவல்துறை !!
சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கருத்து சொல்லி சர்ச்சையில் சிக்கி வருபவர் நடிகை மீரா மிதுன். இவருக்கு சினிமா சிறிதளவு புகழும், பிக்பாஸ் ஓரளவு புகழும் பெற்றுத் தந்தது என்றால், சமூக வலைதளம் தான் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது. ஆனால் அது நேர்மறையான புகழல்ல, எதிர்மறையான புகழ்.
மாடல், நடிகை, கவர்ச்சி, ஆபாசம் என பல வழிகளில் முயற்சித்தும் அவரால் பிரபலமடையவில்லை. இதனால் அவ்வப்போது சர்ச்சையாகவும் பிற நடிகைகள், பிரபலங்கள் குறித்து அவதூறாகவும் பேசி வந்துள்ளார். இந்த நிலையில் எந்த வழியிலாவது தான் பிரபலமடைய வேண்டும் என கருதி தற்போது அவர் பேசிய பேச்சு அவருக்கு வினையை ஏற்படுத்தியுள்ளது.
இவர் அண்மையில் பட்டியலின சமூகத்தினரை இழிவாக பேசி வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார். இது பல்வேறு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்நிலையில் நடிகை மீரா மிதுன் மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையினர் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் மேலும் பல காவல்நிலையங்களில் அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் கைது செய்யப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
newstm.in