பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நடிகை நக்மா போராட்டம் !!

 

Update: 2021-11-30 19:55 GMT

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டெல்லியில் நக்மா தலைமையில் காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. மத்திய அரசு தீபாவளியை முன்னிட்டு பெட்ரோல் மீதான கலால் வரி ரூ. 5-ம், டீசல் மீதான கலால் வரி ரூ. 10-ம் குறைத்தது. எனினும் பெட்ரோல், டீசல் விலை பல நகரங்களில் லிட்டருக்கு நூறு ரூபாயை தாண்டியே விற்பனையாகி வருகிறது. 

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதோடு அத்தியாவசியப்பொருட்களின் விலையை அதிகரித்து வருகிறது. இதனிடையே, பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு அதிகளவில் வரி வசூல் செய்வதாகவும் அதனை குறைக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

அந்த வகையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலை  உயர்வை  கண்டித்து டெல்லியில்  காங்கிரஸ் மகளிர் அணி சார்பில் இன்று போராட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் மகளிர் அணி பொதுச்செயலாளரும் நடிகையுமான நக்மா தலைமையில் ஏராளமான பெண்கள் கலந்துக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

அப்போது பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக தடுப்புகள் மீது ஏறி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

newstm.in

Tags:    

Similar News