கணவர் ஃபகத் பாசில் உடல்நிலை குறித்து நடிகை நஸ்ரியா வெளியிட்ட முக்கிய தகவல்..!
கணவர் ஃபகத் பாசில் உடல்நிலை குறித்து நடிகை நஸ்ரியா வெளியிட்ட முக்கிய தகவல்..!
படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ஃபகத் பாசில் உடல்நிலை குறித்து அவருடைய மனைவியும் நடிகையுமான நஸ்ரியா நசீம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
கொரோனா காலத்தில் அனைத்து நடிகர்களும் ஓய்வாக இருந்தபோதும், வீட்டுக்குள்ளேயே இருந்து ஒரு படத்தில் நடித்துக் கொடுத்தார் ஃபகத் பாசில். மேலும் இந்த படத்தை அவரே தயாரிக்கவும் செய்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான அந்த படம் தேசியளவில் வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மாலிக், இருள், தனக்கம், ஜோஜி, மலையன் குஞ்சு, பாட்டு, பாச்சாவும் அல்புத விளக்கும் ஆகிய படங்களில் வரிசையாக அவர் நடித்து வருகிறார். இதில் மாலிக் மற்றும் இருள் படங்கள் அடுத்தடுத்து வெளிவர தயாராகவுள்ளன.
கொச்சியில் மலையன் குஞ்சு படப்பிடிப்பு நடைபெற்ற போது ஏற்பட்ட விபத்தில் முதல் மாடியில் போடப்பட்ட செட் தரைதளத்தில் விழுந்தது. இதில் மேலே இருந்து கீழே விழுந்த நடிகர் ஃபகத் பாசிலுக்கு மூக்கு உடைந்து காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக கொச்சியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவருடைய உடல்நிலை குறித்து நஸ்ரியா நசீம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.
மருத்துவமனையில் இருந்து கணவர் ஃபகத் பாசில் வீட்டுக்கு வந்துவிட்டார். தற்போது வீட்டிலேயே அவர் ஓய்வில் இருக்கிறார் என நஸ்ரியா தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் ஃபகத் கட்டிலில் படுத்துக்கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றையும் தனது சமூகவலைதள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ள நஸ்ரியா, ஆல் இஸ் வெல் என்று பதிவிட்டுள்ளார். விரைவில் ஃபகத் பாசில் குணமடைய வேண்டும் என பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.