பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்? ரசிகர்கள் உற்சாகம் !!
பிக்பாஸ்ஸில் நடிகை ப்ரியா பவானிசங்கர்? ரசிகர்கள் உற்சாகம் !!
பிக்பாஸ் நிகழ்ச்சி 18 போட்டியாளர்களுடன் தொடங்கி எதிர்பாராதவிதமாக நமீதா வெளியேறிய நிலையில் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். இதில் இன்று ஒருவர் வெளியேற போகிறார்.
இந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்கு பிரபல நடிகை பிரியா பவானி சங்கர் செல்ல இருப்பதாக புதிய பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை ப்ரியா பவானி சங்கர் செய்தி வாசிப்பாளராக அறிமுகமாகி பின்பு சீரியலில் நடிக்க ஆரம்பித்தார். சீரியலில் நடிக்கும் போதே ப்ரியா பவானி சங்கருக்கு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் இருந்தது.
பின்பு மேயாத மான் திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே மிகுந்த வரவேற்பை பெற்று அடுத்தடுத்து படங்களில் பிசியாகிவிட்டார்.
இந்த நிலையில் ப்ரியா பவானி சங்கர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர் போட்டியாளராக இல்லாமல் அவரது படத்தின் புரமோஷனுக்காக செல்ல இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
பிரியா பவானிசங்கர் மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’ஓமண பெண்ணே’ என்ற திரைப்படம் விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் புரமோஷனுக்காக ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானிசங்கர் ஆகிய இருவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.
ஹரிஷ் கல்யாண் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளர் என்பதால் அவர் மலரும் நினைவுகளை பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும்போது மீண்டும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in