ஓடும் காரில் நடிகை கற்பழிப்பு.. டிஎஸ்பியை கொலை செய்ய திட்டம்.. பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு..!

ஓடும் காரில் நடிகை கற்பழிப்பு.. டிஎஸ்பியை கொலை செய்ய திட்டம்.. பிரபல நடிகர் மீது வழக்குப்பதிவு..!

Update: 2022-01-10 13:18 GMT

ஓடும் காரில் நடிகை பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கை விசாரிக்கும் டிஎஸ்பியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக, பிரபல நடிகர் திலீப் மற்றும் அவரது தம்பி உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு நடிகையை காரில் கடத்தி பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த அவர் தற்போது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில், நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரித்து வரும் அதிகாரிகள் சிலரை லாரி ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக நடிகர் திலீப் மீது மேலும் ஒரு வழக்கு புதியதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜாமீனில் வெளிவர முடியாத குற்றப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திலீப், அவரது சகோதரர் இரண்டாவது குற்றவாளியாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொலை முயற்சி வழக்கில் நடிகர் திலீப் உட்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது திலீப் உட்பட 6 பேரையும் விசாரிக்க விசாரணை குழு தயாராகி வருகிறது.

Similar News