கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி புகார்..!

Update: 2021-06-17 14:32 GMT

முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே ஸ்வாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திமுக தகவல் தொழில் நுட்ப காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன், பம்மல் சங்கர் நகர் போலீசில் புகார் அளித்தார்.



இதையடுத்து, கிஷோர் கே ஸ்வாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்தனர். அத்துடன், பெண் பத்திரிகையாளர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பேசிய வழக்கில் கிஷோர் கே ஸ்வாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், கிஷோர் கே ஸ்வாமி மீது நடிகை ரோகிணி ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னைப் பற்றியும், மறைந்த தனது கணவர் ரகுவரனைப் பற்றியும் வலைத்தளத்தில் அவதூறாக கருத்து பதிவு செய்துள்ளதாக கூறியுள்ளார்.

Tags:    

Similar News