கணவருக்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா.. வைரல் வீடியோ !!

கணவருக்கு எதிராக மாணவர்களுடன் இணைந்து கபடி விளையாடிய நடிகை ரோஜா.. வைரல் வீடியோ !!

Update: 2021-11-01 19:14 GMT

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை ரோஜா, தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட  மொழிகளிலும் நடித்து புகழ் பெற்றார். அதன் பின்னர், சினிமாவில் மட்டுமல்லாது அரசியலிலும் கால் பதித்து செல்வாக்கு மிக்க அரசியல்வாதியாகவும் ஆந்திராவில் வலம் வரத் துவங்கினார். 

அந்த வகையில், நடிகை ரோஜா தற்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். நகரி தொகுதியில் நடிகை ரோஜா அறக்கட்டளை நடத்தி வருகிறார். கொரோனாவால் மன இறுக்கத்தில் உள்ள மாணவ, மாணவிகளை உற்சாகப்படுத்தும் வகையில் தனது அறக்கட்டளை சார்பில் கபடி போட்டியை நடத்தினார். 


நகரி மேல்நிலைப் பள்ளியில் கபடி போட்டியை தொடங்கி வைத்த ரோஜா, மாணவர்களுடன் கபடி விளையாடினார். இந்த நிகழ்ச்சியில் நடிகை ரோஜாவுடன் அவரது கணவரும் திரைப்பட இயக்குநருமான ஆர்.கே.செல்வமணியும் கலந்துகொண்டார். ரோஜா ஒரு அணியிலும், அவரது கணவர் செல்வமணி ஒரு அணியிலும் இணைந்து கபடி விளையாடி மாணவர்களை உற்சாகப்படுத்தினர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Full View

newstm.in

Tags:    

Similar News