சென்னை பற்றி நடிகை சமந்தா பதிவிட்ட உருக்கமான வீடியோ!

சென்னை பற்றி நடிகை சமந்தா பதிவிட்ட உருக்கமான வீடியோ!

Update: 2021-03-01 16:39 GMT

தமிழ் திரையுலகில் நடிகை சமந்தாவுக்கு என்றும் தனியிடம் உண்டு. அவர் சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர். தற்போது மும்பையில் கணவருடன் வசித்து வருகிறார். சமந்தா சென்னை பல்லாவரம் மலையின் வீடியோவை வெளியிட்டு உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார். பல்லாவரத்தைச் சேர்ந்த சமந்தா, தனது வீட்டுக்கு அருகே உள்ள மலையை வீடியோ எடுத்துப் போட்டு ஒரு அழகான குட்டி ஸ்டோடியையும் தனது ரசிகர்களுக்காக உருக்கமாக இன்ஸ்டகிராமில் பதிவிட்டுள்ளார்.

அந்தப் பதிவில் இந்த மலை, நான் வளரும்போது என் வீட்டு மாடியிருந்து தெரியும். எனக்குப் பிடித்த இடம் இந்த மலை தான். எந்த ஒரு மனிதரையும் விட என்னை இதற்கு நன்குத் தெரியும். தேர்வு நாட்கள்,  பரபரப்பான காலைத் தருணங்கள், என் முதல் காதல், இதயம் உடைந்த தருணம் , என் நண்பரின் மரணம், கண்ணீர்கள், பிரியாவிடைகள்… இந்த மலையுடன் தான் ஷேர் பண்ணி உள்ளேன் என்று தனது இளமைக்காலத்தை உருக்கமாக நினைவு கூர்ந்துள்ளார்.

Tags:    

Similar News