ஆபாச படம்.. ரூ.25 கோடி கேட்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி..!

ஆபாச படம்.. ரூ.25 கோடி கேட்கிறார் நடிகை ஷில்பா ஷெட்டி..!

Update: 2021-07-30 14:52 GMT

பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா. இவர், ஆபாச படங்கள் தயாரித்து அதை செல்போன் செயலியில் பதிவேற்றம் செய்து பணம் சம்பாதித்த புகாரில் கைதாகி உள்ளார். அத்துடன், மேலும் சில செயலிகளில் ஆபாச படங்களை பதிவேற்றியதில் ராஜ்குந்த்ராவுக்கு தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகித்து, அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்து வருகிறார்கள்.

கோடிக்கணக்கில் பணத்தை அள்ளுவதற்காக ராஜ்குந்த்ராவின் ஆபாச பட லீலைகள் நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்து தான் நடந்ததா..?, அவருக்கும் வழக்கில் தொடர்பு உள்ளதா..? என்பதைக் கண்டறியும் முயற்சியாக போலீசார் சமீபத்தில் ஷில்பா ஷெட்டியிடம் விசாரணை நடத்தினர். தேவைப்பட்டால், மீண்டும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். 

அதே நேரத்தில், ‘நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போதைய தருணத்தில் குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது” என்றும் போலீசார் தெரிவித்தனர். அத்துடன், ராஜ் குந்த்ராவின் பண பரிவர்த்தனைகள் மற்றும் வங்கிக் கணக்குகள் குறித்து ஆய்வு செய்ய மும்பை குற்றப்பிரிவு போலீசார் நிதி தணிக்கையாளர்களை நியமித்துள்ளனர்.

தனது கணவர் ராஜ் குந்த்ரா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்கில் தவறான செய்தி வெளியிட்டதாக  29 ஊடக நிறுவனங்கள் மற்றும் அதன் ஊழியர்கள் மீது நடிகை ஷில்பா ஷெட்டி மும்பை ஐகோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு  நாளை விசாரணைக்கு வர உள்ளது.


சில ஊடக நிறுவனங்கள்  நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும், அனைத்து அவதூறான செய்திகளையும்  நீக்க வேண்டும் மற்றும் ரூ.25 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவதூறு வழக்கு மனுவில் ஷில்பா ஷெட்டி கூறியுள்ளார்.

Tags:    

Similar News