ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்..!!

ஆபாச பட விவகாரத்தில் நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம்..!!

Update: 2021-07-24 12:49 GMT

இந்தியாவில் மாடல்களை வைத்து ஆபாச படங்களை தயாரித்து, அதை வெளிநாட்டு செயலிகளுக்கு விற்பனை செய்ததாக பிரபல் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்தரா கைது செய்யப்பட்டுள்ளார். அவரை முக்கிய குற்றவாளியாக கூறியுள்ள மும்பை காவல்துறை, தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. ஆபாச படங்களில் நடிக்க சொல்லி ராஜ்குந்த்ரா தங்களை மிரட்டியதாக 3 பெண்கள் புகார் அளித்துள்ளது இந்த விவகாரத்தில் மேலும் சூட்டை கிளப்பியுள்ளது.

இந்நிலையில், ஆபாச படதயாரிப்பில் தனது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு தொடர்பில்லை என நடிகை ஷில்பா ஷெட்டி விளக்கம் அளித்துள்ளார். கணவர் ராஜ் குந்த்ரா அப்பாவி என்றும் விசாரணையில் நடிகை ஷில்பா ஷெட்டி கூறியதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
 

Tags:    

Similar News