போதைப்பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது... ரசிகர்கள் அதிர்ச்சி !!

போதைப்பொருள் வழக்கில் நடிகை சோனியா அகர்வால் கைது... ரசிகர்கள் அதிர்ச்சி !!

Update: 2021-08-31 17:22 GMT

போதைப்பொருள் வழக்கில் நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கன்னட திரையுலகம், தெலுங்கு திரையுலகம், பாலிவுட் திரையுலகில் தற்போது நடிகர், நடிகைகள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் விவகாரம் சூடுபிடித்துள்ளது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அப்போது நடிகர்கள் விசாரணைக்கு ஆஜராகி வருகின்றனர்.  

ந்த வகையில், கன்னட திரையுலகில் நடிகையின் போதைப்பொருள் பழக்கம் ரசிகர்களிடம் அதிர்ச்சியைக் கிளப்பியது. ஏற்கனவே போதைப் பொருள் வழக்கில் நடிகைகள் ராகிணி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகிய 2 பேரையும் பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர்.

இந்நிலையில் பெங்களூருவில் கடந்த 12ஆம் தேதி போதைப்பொருள் விற்பனையாளரான நைஜீரியாவை சேர்ந்த தாமஸ் என்பவரை போலீசார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நடிகையும், மாடலுமான சோனியா அகர்வால் உள்ளிட்ட பலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. 

இதையடுத்து, பெங்களூரு ராஜாஜி நகரில் உள்ள கன்னட நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் நேற்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். சோதனையின் போது, சோனியா வீட்டிலிருந்து 40 கிராம் கஞ்சாவை போலீசார் கைப்பற்றினர். இதையடுத்து பெங்களூருவில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த நடிகை சோனியா அகர்வாலும் கைது செய்யப்பட்டார்.

ஆனால் பலரும் தமிழ் நடிகை சோனியா அகர்வால் தான் கைது என சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவர் பெயரில் கன்னட திரையுலகிலும் சோனியா அகர்வால் என்ற நடிகை உள்ளார். அவர் தான் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழிலில் காதல் கொண்டேன், 7ஜி ரென்போ காலனி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த சோனியா அகர்வால் குடும்பத்துடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

newstm.in

Tags:    

Similar News