பிரதமருக்கு கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்.. மன்னிப்பு கோரிய சிஐஎஸ்எஃப் !

பிரதமருக்கு கோரிக்கை வைத்த நடிகை சுதா சந்திரன்.. மன்னிப்பு கோரிய சிஐஎஸ்எஃப் !

Update: 2021-10-22 20:00 GMT

சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையின் போது தனது செயற்கை கால்களை அகற்றும்படி கேட்டபோது, ​​மனச்சோர்வடைந்து, அவமானமாக உணர்ந்ததாக, பிரதமருக்கு ட்வீட் செய்த பிரபல நடனக் கலைஞரும் நடிகையுமான சுதா சந்திரனிடம் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வெள்ளிக்கிழமை மன்னிப்பு கேட்டது.

பிரபல நடனக் கலைஞரும் நடிகையுமானவர் சுதா சந்திரன். இவர், பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த விவகாரம் நாடு முழுவதும் எதிரொலித்தது.  அதாவது, விமான நிலையங்களில் சோதனைகளின் போது தனது செயற்கை கால்களை அகற்ற வேண்டும் என்று கூறுவது வேதனை அளிப்பதாக நடிகையும், நடனக் கலைஞருமான சுதா சந்திரன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட வீடியோ மூலம் சுதா தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். அந்த வீடியோவில், அவர் பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார், அதில், இதுபோன்ற சோதனைகளைத் தவிர்ப்பதற்காக தன்னைப் போன்ற மூத்த குடிமக்களுக்கு ஒரு சிறப்பு அட்டையை வழங்கும்படி கேட்டுக் கொண்டார். சமீபத்தில் விமான நிலையத்தில் நடந்த பாதுகாப்பு சோதனையின் போது தனது செயற்கை கால்களை அகற்றும்படி கேட்டபோது, ​​மனச்சோர்வடைந்து, அவமானமாக உணர்ந்ததாக, பிரதமருக்கு ட்வீட் செய்தார்.

இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமுக வலைதளங்களில் சுதா சந்திரனுக்கு ஆதரவு பெருகிறது. தனது வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய அரசின் கவனத்துக்கு செல்லும் வகையில் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில், சுதா சந்திரனுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு நாங்கள் மிகவும் வருந்துகிறோம் சிஐஎஸ்எஃப்  தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சிஐஎஸ்எஃப் , நெறிமுறையின்படி, விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டுமே பாதுகாப்பு சோதனைகளுக்காக புரோஸ்டெடிக்ஸ் அகற்றப்பட வேண்டும்.

சம்பந்தப்பட்ட பெண் பணியாளர்கள் ஏன் சுதா சந்திரனுக்கு இத்தகைய கோரிக்கை விடுத்தார்கள் என்பதை நாங்கள் ஆராய்வோம். பயணிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படாத வகையில், எங்கள் பணியாளர்கள் அனைவரும் நெறிமுறைகளில் மீண்டும் விழிப்புணர்வு பெறுவார்கள் என சிஐஎஸ்எஃப் (Central Industrial Security Force) கேட்டுக்கொண்டது.
சில வருடங்களுக்கு முன்பு நடந்த கார் விபத்தில் சுதா சந்திரன் தனது காலை இழந்தார். சுதா பின்னர் ஒரு செயற்கை கால் உதவியுடன் தற்போது, மீண்டு வந்துள்ளார்.

newstm.in

Tags:    

Similar News