அட போங்கப்பா.. விரக்தியில் ராஜபாளையத்தை காலி செய்த நடிகை கவுதமி !!

அட போங்கப்பா.. விரக்தியில் ராஜபாளையத்தை காலி செய்த நடிகை கவுதமி !!

Update: 2021-03-23 10:05 GMT

அதிமுக, பாஜகவுக்கு தேர்தல் உடன்பாடு ஏற்படும் முன்பே ராஜபாளையம் தொகுதி பாஜக பொறுப்பாளராக நடிகை கவுதமி நியமிக்கப்பட்டார். அதேபோல் சேப்பாக்கம் தொகுதி பாஜக பொறுப்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டார். இருவரும் கடந்த 3 மாதங்களாக தங்களை வேட்பாளர்களாக தங்களுக்கு தாங்களே அறிவித்துக்கொண்டு பிரச்சாரம் செய்தனர். மக்களையும் சந்தித்து வந்தனர். இதனால் அத்தொகுதிகளுக்கு அவர்கள் இருவருமே அறிவிக்கப்படுவர் எதிர்பார்ப்பு எழுந்தது

ஆனால் தொகுதி உடன்பாட்டில் புஷ் ஆனது. சேப்பாக்கம் தொகுதி பாமகவுக்கும், ராஜபாளையம் தொகுதியில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் போட்டியிடுகிறார். எனினும் குஷ்புக்கு மாறாக ஆயிரம் விளக்கு தொகுதியாவது ஒதுக்கப்பட்டது. ஆனால் நடிகை கவுதமியின் நிலைமையே பரிதாபமானது. அவருக்கு எங்கும் போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை.

இதனால் கவுதமி கடும் அதிருப்தி அடைந்து ராஜபாளையத்தில் தங்கியிருந்த வீட்டை அவர் காலி செய்தார். மேலும் அங்கிருந்து நிர்வாகிகளிடம் கூட தெரிவிக்காமல் சென்னை திரும்பினார். அதேநேரத்தில் பாஜகவினரும் கவுதமி மீது அதிருப்தி அடைந்துள்ளனர். 

தொகுதிப் பொறுப்பாளராக இருந்தும் தொகுதிப் பக்கமும், பாஜக போட்டியிடும் ஒரே தொகு தியான விருதுநகரிலும் கவுதமி பிரச்சாரத்துக்கு செல்லாதது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனினும் அவர் தற்போது புதுச்சேரி, கோவையில் பிரச்சாரம் செய்கிறார்.

newstm.in


 

Tags:    

Similar News