#BREAKING:- ஆற்காடு வீராசாமி ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

#BREAKING:- ஆற்காடு வீராசாமி ஆஸ்பத்திரியில் அட்மிட்..!

Update: 2022-01-06 13:22 GMT

திமுக மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மின்சாரத் துறை அமைச்சருமான ஆற்காடு என்.வீராசாமி திடீர் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீட்டில் தவறி விழுந்து கால் எலும்பு முறிவு ஏற்பட்டதால் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்படுவதாக கூறப்படுகிறது.

திமுகவின் தொடக்க காலம் முதல் கட்சியில் முக்கிய பங்கு வகிக்கின்றார். அந்த வகையில், திமுக முன்னாள் பொருளாளராக 1994 முதல் 2008 வரை பணியாற்றியுள்ளார். அதன்பின்னர், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவராக 2001 முதல் 2006 வரை பணியாற்றியுள்ளார்.மேலும், மூன்று முறை அமைச்சராக பணியாற்றியுள்ளார்.

இதையடுத்து, உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் 2011-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News