பிரபல தயாரிப்பாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !!
பிரபல தயாரிப்பாளர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி !!
தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பாளர் முரளி, மாரடைப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விலங்குகளை வைத்துப் படமெடுத்த பிரபலமான இயக்குநர் ராம.நாராயணன், தான் இயக்கிய 80க்கும் மேற்பட்ட படங்களைத் தன்னுடைய தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்தார்.அவருடைய மறைவுக்குப் பிறகு மகன் முரளி ராமசாமியும், அவருடைய மனைவி ஹேமா ருக்மணியும் நிறுவனத்தை நடத்தி பெரிய பட்ஜெட் படங்களை தயாரித்து வருகின்றனர்.அந்த வகையில் கடைசியாக இவர் தயாரிப்பில், தளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியானது. விஜய் நடித்த மெர்சல் படத்தை 120 கோடி செலவில் இயக்கி, 250 கோடிககு மேல் லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவர், மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.