வயது வந்தவர்கள் மதத்தை பொருட்படுத்தாமல் இணையை தேர்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம்

வயது வந்தவர்கள் மதத்தை பொருட்படுத்தாமல் இணையை தேர்வு செய்யலாம்: உயர்நீதிமன்றம்

Update: 2021-09-17 12:34 GMT

திருமண வயதான இரண்டு பேர் மதத்தை பொருட்படுத்தாமல் இணையை தேர்வு செய்யலாம் என்கிற உரிமையை மீண்டும் உறுதி செய்துள்ளது அலஹாபாத் உயர்நீதிமன்றம்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஷிஃபா ஹாசனும் அவருடைய காதலரும் சேர்ந்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில் வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த  இருவரும் காதலித்து வருகிறார்கள். மேலும் சுய விருப்பத்தில் பேரில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 

காதலரை திருமணம் செய்துகொள்வதற்காக ஷிஃபா ஹாசன் இந்துவாக மதம் மாற ஆவணம் செய்துள்ளார். ஆனால் காவல்துறை தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, ஷிஃபா ஹாசன் முறையீட்டை மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. 

இதை எதிர்த்து அவர் அலஹாபாத் உயர்நீதிமன்றத்தை மனு செய்துள்ளார். இதுதொடர்பான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து தலைமை நீதிபதி மனோஜ் குப்தா தலைமையிலான அமர்வு ஷிஃபா ஹாசன் வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்தது.

அதில், திருமண வயதை அடைந்த இருவர் தங்களுடைய இணையை மதத்தை பொருட்படுத்தாமல் தேர்வு செய்ய முழு உரிமை உண்டு. இது சர்ச்சைக்குரிய விஷயம் அல்ல. இவர்களுடைய கருத்தில் நீதிபதிகள் மட்டுமில்லாமல், அவர்களுடைய பெற்றோர் கூட தலையிட முடியாது என குறிப்பிட்டனர்.

மேலும் சேர்ந்து வாழ விரும்பும் இருவருடைய உயிருக்கு ஆபத்து இருந்தால், போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கவும் உத்தரவில் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.  அலஹாபாத் நீதிமன்ற வெளியிட்டுள்ள இந்த உத்தரவு மகிழ்ச்சி அளிப்பதாக மனுதாரர் ஷிஃபா தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News