மீண்டும் ஒரு சவரன் ரூ.36,000-க்கு குறைந்த தங்கத்தின் விலை !!

மீண்டும் ஒரு சவரன் ரூ.36,000-க்கு குறைந்த தங்கத்தின் விலை !!

Update: 2021-05-12 11:52 GMT

ஒவ்வொரு வருடமும் சித்திரை மாதத்தில் வருகிற வளர்பிறை அமாவாசை தினத்தையடுத்து வரும் திரிதியை அட்சய திரிதியை நாளாக கொண்டாடி வருகிறோம்.  இந்த வருடம் வரும் வெள்ளிக்கிழமை அட்சயதிரிதி கொண்டாடுகிறோம் 
 
அட்சய திருதியையன்று தமிழகம் முழுவதும் உள்ள நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதும். அந்த வாரம் முழுவதுமே முன்பதிவு செய்து பணத்தை வாடிக்கையாளர்களிடம் பெற்றுக் கொண்டு, அட்சய தினத்தன்று நகையைக் கொடுக்கும் திட்டங்களை எல்லாம் அறிமுகப்படுத்தி நகைக்கடைகள் கண ஜோராக இத்தனை வருடங்களாக கல்லாக் கட்டி வந்தன.  ஆனால் தற்போது அட்சய திரிதியை லாக்டவுன் சமயத்தில் வருவதால் மக்களும் நகை வியாபாரிகளும் கவலையில் உள்ளனர். 

இந்நிலையில், மாதத்தின் முதல் நாள் முதல் ஏறிக்கொண்டிருந்த தங்கத்தின் விலை கடந்த நாட்களாக குறைந்து வருவது அதுவும் பண்டிகை சமயத்தில் குறைவதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர் 

தங்கத்தின் விலை இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.36,000-க்கு விற்பனையாகிறது. இன்று கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ரூ.4,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிலோ வெள்ளியின் விலை கிலோவுக்கு 300 ரூபாய்  குறைந்து ரூ.75,900-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது

Tags:    

Similar News