வயது ஒரு தடையே கிடையாது.. ஆஸி.யை நொறுக்கி 41 வயதிலும் கெயில் படைத்த சாதனை !!

வயது ஒரு தடையே கிடையாது.. ஆஸி.யை நொறுக்கி 41 வயதிலும் கெயில் படைத்த சாதனை !!

Update: 2021-07-13 19:05 GMT

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான கிறிஸ் கெயில் டி20 தொடரில் 14,000 ரன்களை அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கிறிஸ் கெயில் என்றாலே உலக கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான நபர். ஆனால் பவுலர்களுக்கு அவரை பிடிக்காது. ஏனெனில் அவரது அதிரடி அப்படி இருக்கும் என ஒவ்வொரு ரசிகரும் கூறுவர். ஐபிஎல் தொடர் போன்று உலகம் முழுவதும் நடக்கும் கிரிக்கெட் தொடர்களில் இவர் கண்டிப்பாக இடம்பெறுவார்.

இந்த நிலையில் தற்போது வெஸ்ட் இண்டீஸ்- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் ஏற்கனவே நடந்த இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றிபெற்றிருந்தது. இந்த நிலையில் மூன்றாவது போட்டி செயிண்ட் லூசியாவில் நடைபெற்றது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் 4 பவுண்டரி 7 சிக்சர்கள் என 38 பந்துகளில் 67 ரன்கள் விளாசி அசத்தினார் கிறிஸ் கெயில். இந்த வெற்றியின் மூலம் 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் வென்றுள்ளது.
41 வயதாகும் கிறிஸ் கெயில் இந்தப் போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டில் 14 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். இதனை தன்னுடைய 431 ஆவது டி20 போட்டியில் செய்திருக்கிறார்.  

இவருக்கு அடுத்த இடத்தில் கெய்ரன் போலார்டு 10,836 ரன்களுடனும், 3ஆவது இடத்தில் ஷோயப் மாலிக் 10,741 ரன்களுடனும், 4ஆவது இடத்தில் டேவிட் வார்னர் 10017 ரன்களுடனும், 5ஆவது இடத்தில் விராட் கோலி 9,922 ரன்களுடனும் இருக்கின்றனர், பிஞ்ச் (9,728), ஏபி டிவில்லியர்ஸ் (9,318) என்று அடுத்தடுத்த நிலையில் இருக்கின்றனர்.

newstm.in

Tags:    

Similar News