தொடங்கியது அதிமுக உட்கட்சி தேர்தல்!

தொடங்கியது அதிமுக உட்கட்சி தேர்தல்!

Update: 2021-12-13 11:00 GMT

நெல்லை, மயிலாடுதுறை, நீலகிரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட  20 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அதிமுகவின் செயற்குழு கூட்டம் கடந்த 1ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,  சட்ட  விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  அதனைத் தொடர்ந்து அதிமுக அதிமுக ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வம், இணை  ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் 20 மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது. அதிமுக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம், கன்னியாகுமரி மேற்கு மாவட்டம், தென்காசி வடக்கு மாவட்டம், தென்காசி தெற்கு மாவட்டம் ஆகிய இடங்களில் உட்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.

அதே போல் விருதுநகர் கிழக்கு மாவட்டம், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் , மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்திலும் தேர்தல் நடைபெறுகிறது.

மேலும் காஞ்சிபுரம் மாவட்டம், பெரம்பலூர் மாவட்டம் அரியலூர் மாவட்டம் ,மதுரை மாநகர் மாவட்டம் , சேலம் புறநகர் மாவட்டம் ,சேலம் மாநகர் மாவட்டம் ஆகிய 15 மாவட்டங்களில் தேர்தல் நடைபெறுகிறது.

ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிளை, கழக நிர்வாகிகள், பேரூராட்சிகளுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள், நகரங்களுக்கு உட்பட்ட வார்டு கழக நிர்வாகிகள் மற்றும்  மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட வட்ட கழக நிர்வாகிகள் ஆகிய பொறுப்புகளுக்கான  முதற்கட்ட தேர்தல்கள் இன்று மற்றும் நாளை நடைபெறுகிறது.

இதற்காக மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர்கள் மற்றும் ஒன்றிய, பேரூராட்சி, நகரம் மற்றும் மாநகராட்சி பகுதிகளில் தேர்தல் ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் மாநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான தேர்தலை கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

newstm.in

Similar News