அதிமுக கூட்டணிக்கு 50 இடங்களுக்கு மேல் வாய்ப்பே இல்லை!
அதிமுக கூட்டணிக்கு 50 இடங்களுக்கு மேல் வாய்ப்பே இல்லை!
தமிழ்நாடு தேர்தலில் திமுகவுக்காகவும் மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்காவும் ஐபேக் நிறுவனம் தேர்தல் பணி ஆற்றி வருகிறது. தேர்தலுக்குப் பிந்தைய கணிப்பின் அடிப்படையில் திமுகவுக்கு எதிரான அதிமுக மற்றும் பிற அணிகளுக்கும் சேர்ந்து 50 தொகுதிகளுக்கு மேல் கிடைக்காது என்று திட்டவட்டமாகக் கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர். ரிபப்ளிக் தொலைக்காட்சியின் அர்னாப் கோஸ்வாமிக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர்.
மேலும் மேற்கு வங்காளத்தில் 200 தொகுதிகளை வெல்வோம் என்று அமித் ஷா கூறியுள்ளாரே என்பதற்கு, அவர்களுக்கு பணபலம், மத்திய அரசின் ஆட்சி பலம் இருக்கிறது. ஆனால் மம்தா பானர்ஜி கடுமையாகப் போராடுகிறார். 100 தொகுதிகளுக்கு மேல் பாஜகவுக்கு கிடைக்க வாய்ப்பே இல்லை என்று உறுதியாகச் சொல்வதாகவும் குறிப்பிட்டார் பிரசாந்த் கிஷோர்.
டிடிவி தினகரன், கமல் ஹாசன், சீமான் என மற்ற மூன்று அணிகளும் அதிமுக அணியும் சேர்ந்து 50 க்கும் மேல் வெற்றி பெறாது என்று கூறியிருப்பது அதிமுக தரப்பை கலக்கம் அடையச் செய்துள்ளது.