பாஜக கூட்டத்தில் அதிமுக பிரமுகருக்கு அடி, உதை!! கிருஷ்ணகிரியில் பரபரப்பு!
சிஏஏவுக்கு எதிர்ப்பு.. அதிமுக பிரமுகர் மீது பாஜகவினர் கடும் தாக்குதல்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பாஜக பொதுக்கூட்டத்தில் குடியுரிமைத் திருத்த சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்ட அதிமுக பிரமுகர் தாக்கப்பட்டார். குடியுரிமைத் திருத்த சட்டத்தை ஆதரித்து பாஜகவினர் பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் பேரணிகளும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், தேன்கனிக்கோட்டையில் பாஜக சார்பில் குடியுரிமை சட்ட திருத்தத்தை ஆதரித்து பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் மாநில நிர்வாகிகள் உரையாற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது அதிமுகவை சேர்ந்த ராஜா என்பவர் மது போதையில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக முழக்கமிட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜகவினர் ராஜாவை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனால் பதற்றம் ஏற்பட்டதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் ராஜாவை மீட்டு அங்கிருந்து அழைத்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
newstm.in