கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை!!

கோவையில் அதிமுக பிரமுகர் வீட்டில் சோதனை!!

Update: 2022-01-25 08:00 GMT

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில் அதிமுக பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரணை நடத்தினர்.

வீரபாண்டி புதூர் பகுதியை சேர்ந்த கே.வி.என்.ஜெயராமனின் மனைவி கீர்த்தி ஜெயராமன்  நெ.4 வீரபாண்டி பேரூராட்சியின் தலைவராக கடந்த 2001 முதல் 2016 வரை பதவி வகித்துள்ளார். அதிமுகவைச் சேர்ந்த இவர், தனது பதவிக்காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது.

இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் லதா, கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் சமீபத்தில் புகார் அளித்தார். அதில், கே.வி.என்.ஜெயராமன் மொத்தம் ரூ. 1 கோடியே 25 லட்சத்துக்கு இருப்பதாக கூறியிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு அவரின் சொத்து மதிப்பு ரூ.3 கோடியே 43 லட்சமாக உயர்ந்துள்ளது.

2011-ம் ஆண்டு முதல் 2016-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் அவர் வருமானத்தைவிட அதிகமாக ரூ.1 கோடியே 45 லட்சத்துக்கு சொத்து சேர்த்ததாகவும், இந்த சொத்துகள் மற்றும் நகைகள் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் வாங்கப்பட்டுள்ளன என தெரிவித்துள்ளார்.

இதன் பேரில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.வி. என்.ஜெயராமன் மற்றும் அவரது மனைவி கீர்த்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்புச்சட்டத்தின் கீழ் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகல் ஜெயராமன் வீட்டுக்கு வந்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 5 பேர்சோதனை நடத்தினர். இந்நிலையில் ஜெயராமன் வீட்டு முன்பாக ஏராளமான அதிமுக தொண்டர்கள் குவிந்துள்ளனர்.லஞ்ச ஒழிப்பு துறை சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து வீட்டுவாசலில் அமர்ந்து முழக்கமிட்டனர்.

newstm.in

Similar News