அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை இழுபறி! இன்று அண்ணாமலை முக்கிய முடிவு!!
அதிமுக – பாஜக பேச்சுவார்த்தை இழுபறி! இன்று அண்ணாமலை முக்கிய முடிவு!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய வரும் வெள்ளிக்கிழமை கடைசிநாள். இந்நிலையில் கூட்டணி கட்சிகள் இன்னும் தொகுதிப் பங்கீட்டையே இறுதி செய்யாமல் உள்ளன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து, தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கின. தி.மு.க சார்பில் காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியுடன் பேச்சுவார்த்தையை நடத்தி முடித்துள்ளது.
ராயப்பேட்டையில் நடைபெற்ற அதிமுக – பாஜக இடையிலான பேச்சுவார்த்தையில், பா.ஜ.க அதிகபட்சம் 15 சதவீதம் இடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் 5% மட்டுமே தரப்படும் என்று அதிமுக கூறியதாக தெரிகிறது.
5 சதவீத அளவிற்கு மட்டுமே இடங்கள் கிடைப்பதால் பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள் கூட்டணியை கைவிட வலியுறுத்தியதாக பா.ஜ.க வட்டாரத்திலிருந்து தகவல்கள் கிடைத்துள்ளது.
தனித்துப் போட்டியிட்டால் அதிக இடங்களில் வெற்றி பெறமுடியும் என மூத்த தலைவர்கள் பாஜக தலைவர் அண்ணாமலை இடம் கூறியதால் கூட்டணி குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கூட்டணி முடிவை பாஜக தலைவர் அண்ணாமலை, தேசிய பாஜகவிடம் கலந்து ஆலோசித்து முடிவெடுக்க உள்ளார் எனவும் மூத்த தலைவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் பா.ஜ.க வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
newstm.in