விமான சேவைக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை !

விமான சேவைக்கு உடனே தடை விதிக்க வேண்டும்.. மத்திய அரசுக்கு முதலமைச்சர் கோரிக்கை !

Update: 2021-11-27 19:00 GMT

உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் ஆன B.1.1.529 தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவைத் தொடர்ந்து ஹாங்காங், போட்ஸ்வானா, இஸ்ரேல் ஆகிய நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவியுள்ளது. 

இதுவரை வந்த காெராேனா வைரஸ்களில் இது அதிக வீரியம் கொண்டது என்று வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இந்த வைரசுக்கு எதிராக தடுப்பூசிகள் பெரிய அளவில் வேலை செய்யாது. நிச்சயமாக குறைவான செயல்திறனையே கொண்டிருக்கும் என்றும் புதிய வைரஸ் காற்றின் மூலம் வேகமாக பரவக் கூடும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்திருக்கிறார்கள். இந்த வைரஸ் பற்றி ஆலோசிக்க, விவாதிக்க உலக சுகாதார அமைப்பு அவசரமாக கூடியது. நேற்று நடந்த கூட்டத்தில், விஞ்ஞானிகள் கிரேக்க எழுத்தான ‘ஒமிக்ரான்’ என இந்த புதிய வகை கொரோனா வைரசுக்கு பெயராக சூட்டியுள்ளனர். 

இதற்கிடையே புதிய கொரோனா பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து விமானங்கள் வர சில நாடுகள் தடை விதித்துள்ளது. எனினும் இந்தியா இதுபாேன்ற அறிவிப்பை இதுவரை வெளியிடவில்லை. இந்நிலையில் ‘ஒமிக்ரான்’ என்ற புதிய வகை கொரோனோ பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நாடுகளில் இருந்து இயக்கப்படும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் நரேந்திர மோடியிடம் வலியுறுத்தி உள்ளார். 
 


இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்ட அவர், புதிய வைரஸ் மாறுபாட்டால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து விமான இயக்கங்களை நிறுத்துமாறு பிரதமரை நான் கேட்டுக்கொள்கிறேன். மிகவும் சிரமப்பட்டு, கொரோனாவில் இருந்து நம் நாடு மீண்டுள்ளது. இந்த புதிய மாறுபாடு வைரஸ் இந்தியாவிற்குள் நுழைவதைத் தடுக்க முடிந்த அனைத்தையும் செய்வோம், என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்
 


newstm.in

Tags:    

Similar News