கர்நாடகாவில் தொடர்ந்து கொட்டிய கனமழையால் பெங்களூரு விமான நிலையத்தில் வெள்ளம் சூழ்ந்து பயணிகள் தத்தளிக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. 

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல்வேறு இடங்கள், பிரதான சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது. 

மேலும், கோனப்பன அக்ரஹார பகுதியில் வீடு ஒன்றில் மின் கசிவு ஏற்பட்டதில் ஒருவர் உயிரிழந்தார். அதேவீட்டில் இருந்த மற்றொரு நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 
இந்நிலையில், கனமழையால் பெங்களூரு விமான நிலையம் வெள்ளநீரில் தத்தளித்து வருகிறது. விமான நிலையத்தின் முகப்பு பகுதி முழுவதும் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளதால் தண்ணீரில் தத்தளித்தப்படியே கடந்நதுசெல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

அதேநேரத்தில், அதிகளவு தண்ணீர் தேங்கியதால் கார்கள் செல்ல முடியாத சூழல் உண்டாது. இதனால் பலர் விமான நிலையத்திற்கு வெளியே டிராக்டரில் சென்ற நிகழ்வையும் காண முடிந்தது. பெங்களூருவில் இன்றும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.


newstm.in
 

Tags: