விஜய் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' திரைப்படம்..!
விஜய் டி.வி.யில் நேரடியாக ஒளிபரப்பாகும் ஐஸ்வர்யா ராஜேஷின் 'பூமிகா' திரைப்படம்..!
ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மற்றும் ஃபேஷன் ஸ்டுடியோஸ் இனைந்து தயாரித்துள்ள படம் ‘பூமிகா’. இப்படத்தை அறிமுக இயக்குநர் ரதீந்திரன் ஆர்.பிரசாத் இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை பாத்திரத்தில் நடித்துள்ளார்.
த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு முழுக்க மலைப் பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இது ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 25-வது படமாகும். இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ராபர்ட், இசையமைப்பாளராக ப்ரித்வி சந்திரசேகர், எடிட்டராக ஆனந்த் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.
கொரோனா 2-ம் அலை காரணமாக தமிழ்நாட்டில் அனைத்து தியேட்டர்களும் மீண்டும் மூடப்பட்டுள்ளதால், ரிலீசுக்குத் தயாராக உள்ள புதிய படங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக புதிய படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகிறது. அந்தவகையில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த ‘பூமிகா’ படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இதில், வருகிற 22-ம் தேதி 3 மணிக்கு விஜய் டிவியில் ‘பூமிகா’ படம் ஒளிபரப்பாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.