”அந்த படத்தில் நடிக்கவில்லை” ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் விளக்கம்..!
”அந்த படத்தில் நடிக்கவில்லை” ஐஸ்வர்யா ராஜேஷ் திடீர் விளக்கம்..!
தெலுங்கில் தயாராகி வரும் ‘புஷ்பா’ படத்தில் தான் நடிக்கவில்லை, ஊடகங்களில் வெளியான செய்திகள் உண்மை கிடையாது என நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக விஜய் சேதுபதியுடன் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்த க.பெ. ரணசிங்கம் படம் ஓ.டி.டி-யில் வெளியானது. அதை தொடர்ந்து அவர் நடித்துள்ள பல்வேறு படங்கள் ரிலீஸுக்காக காத்திருக்கின்றன.
அதில் கவுதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள ‘துருவ நட்சத்திரம்’ படமும் ஒன்று. அதை தொடர்ந்து தமிழில் 5 படங்களும் தெலுங்கில் 2 படங்களில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகும் ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ ரீமேக்கிலும் நடிக்கிறார்.
இந்நிலையில் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பதாக நேற்று செய்தி வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். புஷ்பா படத்தில் நடிக்கவில்லை, அது பொய்யான தகவல்கள் என அவர் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் மிக எதிர்பார்ப்புக்கு
இடையில் தயாராகி வரும் புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக நடிக்கிறார். செம்மரக்கட்டை கடத்தலை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ஃபகத் பாசில் வில்லனாக நடிக்கிறார்.
திருப்பதி உள்ளிட்ட தமிழக வனப்பகுதிகளை ஒட்டியுள்ள ஆந்திராவுக்கு சொந்தமான இடங்களில் ‘புஷ்பா’ படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா இரண்டாம் அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஜூலையில் இந்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in