சின்னத்திரை பக்கம் திரும்பிய அஜித் பட நடிகை !!

சின்னத்திரை பக்கம் திரும்பிய அஜித் பட நடிகை !!

Update: 2021-06-17 11:06 GMT

பைப் ஸ்டார் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தவர் கனிகா. தல அல்டிமேட் ஸ்டார் அஜித்துக்கு ஜோடியாகவும், தாயாகவும் வரலாறு படத்தில் அவரது நடிப்பு வெகுவாகப் பேசப்பட்டது. தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் படங்களிலும் நடித்திருந்த கனிகா மலையாள திரையுலகிலும் ஒரு ரவுண்ட் வந்தார்.மலையாள நடிகையான இவர் குடும்பத்துடன் கேரளாவில் வசித்து வருகிறார். திருமணமாகி அவருக்கு பத்து வயதில் மகன் உள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு நாயகியாக வாய்ப்பு கிடைக்காமல், குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்துவந்தார்.இந்நிலையில் நடிகை கனிகா தற்போது பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடரில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் அத்தொடரைக் கோலங்கள் தொடர் இயக்கிய திருச்செல்வம் இயக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இவர் திருவிளையாடல் தொடரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Tags:    

Similar News