இந்தியில் தயாராகும் தல அஜித்தின் 'வீரம்'
இந்தியில் தயாராகும் தல அஜித்தின் 'வீரம்'
அல்டிமேட் ஸ்டார் அஜித், தமன்னா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'வீரம்' திரைப்படம் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. நடிகர் அஜித் மற்றும் இயக்குனர் சிவாவின் கூட்டணியில் வெளியான முதல் திரைப்படம் இதுதான் . மேலும், இவர்கள் கூட்டணியில் அடுத்தடுத்து வெளிவந்த வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற திரைப்படங்கள் மிக பெரிய அளவில் வெற்றியடைந்தன.
இந்த படம் தெலுங்கில் பவன் கல்யாண் நடிக்க கட்டமறயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வரவேற்பை பெற்றது.இதையடுத்து வீரம் படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய முயற்சிகள் நடந்தன. இந்தி ரீமேக்கில் அக்ஷய்குமார் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று அவர் விலகி விட்டார். தற்போது அவருக்கு பதிலாக சல்மான்கான் நடிக்க போகிறாராம்.
இந்த படத்துக்கு பை ஈத் கபி தீவாளி என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா ஊரடங்கு முடிந்ததும் படப்பிடிப்பை முழு வீச்சில் நடத்தி முடிக்க திட்டமிட்டு உள்ளனர். இந்த படத்திற்கு சல்மான்கானுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே ஒப்பந்தம் ஆகியுள்ளார்.