முகாமில் ஏ.கே.47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுதள்ளிய வீரர்.. சக ராணுவ வீரர்கள் 4 பேர் பலி !!
முகாமில் ஏ.கே.47 துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுதள்ளிய வீரர்.. சக ராணுவ வீரர்கள் 4 பேர் பலி !!
நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் நிறைந்த மாநிலங்களில் ஒன்றாக சத்தீஷ்கர் உள்ளது. அவர்களை கட்டுப்படுத்துவதற்காக சுக்மா மாவட்டம் லிங்கம் பள்ளி என்ற இடத்தில் துணை ராணுவ படை முகாம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த முகாமில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் தங்கி இருந்து கண்காணிப்பு மற்றும் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இரவில் வீரர்கள் பலர் தூங்கிக் கொண்டிருந்த போது, திடீரென அதிகாலை 3.30 மணி அளவில் துப்பாக்கிச் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அணைத்து வீரர்களும் எழுந்துசென்று அங்கு பார்த்தனர். அப்போது, பணியில் இருந்த வீரர் ரீதேஷ் ரஞ்சன் என்பவர் தனது ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்து அங்கிருந்த வீரர்களை நோக்கி சரமாரியாக சுட்டார்.
இதில் 4 வீரர்கள் குண்டு பாய்ந்து அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். 3 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற வீரர்கள் துப்பாக்கியால் சுட்ட நபரை மடக்கி பிடித்தனர். அவரை உயர் அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ரீதேஷ் ரஞ்சன் எதற்காக இந்த தாக்குதலை நடத்தினார் என்பது குறித்து தெரியாத நிலையில், அவை தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படுகிறது. விசாரணைக்கு பிறகு தான் முழு விவரம் தெரியவரும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். காயம் அடைந்த வீரர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மத்திய படை போலீசார் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
newstm.in