தி ரியல் ஹீரோ என நிரூபித்த அக்ஷய்... கோடி ரூபாயை கொரோனா நிவாரண பணிக்கு நன்கொடை !!
தி ரியல் ஹீரோ என நிரூபித்த அக்ஷய்... கோடி ரூபாயை கொரோனா நிவாரண பணிக்கு நன்கொடை !!
பிரபல பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார். இவர், தமிழில் ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிகாந்துக்கு வில்லனாக நடித்தார். இதனிடையே சமீபத்தில் அக்ஷய் குமார் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிகிச்சைக்கு பின் மீண்டார்.
தற்போது நாடு முழுவதும் கொரோனா 2ஆவது அலை தீவிரமாகி உள்ள நிலையில் அதனை தடுக்க மத்திய, மாநில அரசுகள் போராடி வருகினறனர். மேலும் பல்வேறு நாடுகள் இந்தியாவுக்கு உதவி செய்து வருகிறது. அதேபோல் பிரபலங்களும் உவிக்கரம் நீட்டிய்ள்னர்.
அந்த வகையில், நடிகர் அக்ஷய் குமார், ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கி இருக்கிறார். இந்தத் தொகையை கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் நடத்தும் தொண்டு நிறுவனத்துக்கு அளித்துள்ளார். இதற்கு டுவிட்டரில் நன்றி தெரிவித்துள்ள கவுதம் கம்பீர், தேவைப்படுபவர்களுக்கு உணவு, மருத்துவ உதவி, ஆக்சிஜன் வழங்க ரூ.1 கோடி நன்கொடை அளித்த அக்ஷய்குமாருக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.
கடந்த வருடம் கொரோனா தொற்று பரவ ஆரம்பித்ததும், பிரதமர் மோடி கொரோனாவை எதிர்கொள்ள நிதி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தபோது, நடிகர் அக்ஷய் குமார் ரூ.25 கோடி நன்கொடை வழங்கினார். இதுதவிர திரைப்பட தொழிலாளர்களுக்கும் அவர் பல்வேறு உதவிகளை செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் பிரதமர் நிதிக்கு நிதியுதவி அளித்தார் என்பது நினைவுக்கூறத்தக்கது.
Every help in this gloom comes as a ray of hope. Thanks a lot @akshaykumar for committing Rs 1 crore to #GGF for food, meds and oxygen for the needy! God bless 🙏🏻 #InThisTogether @ggf_india
— Gautam Gambhir (@GautamGambhir) April 24, 2021
newstnin