கொரோனா வைரஸ் எதிராலியாக, மறு உத்தரவு வரும் வரை சீன நாட்டு பயணிகளை அழைத்து வர வேண்டாம் விமான நிறுவனங்களுக்கு சீன அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

சீனாவில் கொரோனா வைரஸ் அதிகமாக பரவியதால் அந்நாட்டில் 500க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி உள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உலக நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது கொரோனா வைரஸ். இந்நிலையில், சீனாவில் தங்கியிருந்த இந்தியர்கள் தனி விமானம் மூலமாக மத்திய அரசின் நடவடிக்கையால்  அழைத்து வரப்பட்டனர். மேலும் சீனாவில் படித்த இந்தியா மாணவர்கள் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டதால் தனி மையம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

கடந்த 3 தினங்களுக்கு முன் சென்னைக்கு வந்த சீன நாட்டை சேர்ந்த 8 பேருக்கு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்த  நிலையில் சிங்கப்பூர், மலேசியா, கொழும்பு, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து சென்னைக்கு வரும் விமானங்களில் சீன நாட்டு பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களை பயணிகளாக மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக அழைத்து வர வேண்டாம் என்று விமான நிறுவனங்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.  இதனால் சீனா நாட்டை சேர்ந்தவர்கள் வருகை நிறுத்தப்பட்டுள்ளது.

newstm.in

Tags: