அலர்ட்! நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 961ஆக உயர்வு!!

அலர்ட்! நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 961ஆக உயர்வு!!

Update: 2021-12-31 09:32 GMT

நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, நாட்டில் ஒமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 961ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக டெல்லியில் 263 பேர் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் 252 பேரும், குஜராத்தில் 97 பேரும், ராஜஸ்தானில் 69 பேரும், கேரளத்தில் 65 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகம் 7ஆவது இடத்தில் உள்ளது. இதுவரை 45 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதுவரை மொத்தம் 22 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஒமைக்ரான் பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டு உள்ளன.

இதுவரை 320 பேர் ஒமைக்ரான் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் 641 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்ட 45 பேரில் 20க்கும் அதிகமானோர் குணமடைந்து வீடு திரும்பினர்.

newstm.in

Similar News