அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்.. பிரபல நடிகை சர்ச்சை கருத்து !!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்.. பிரபல நடிகை சர்ச்சை கருத்து !!

Update: 2021-08-14 10:16 GMT

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டத்தை தமிழகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். அர்ச்சகர் பயிற்சி முடித்த 58 அர்ச்சகர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பணி நியமன ஆணை வழங்கினார். இந்த நிலையில் அரசின் நடவடிக்கை குறித்து நடிகையும் பாஜக நிர்வாகியுமான காயத்ரி ரகுராம் கருத்து தெரிவித்திருப்பது சர்ச்சையாகியுள்ளது. 

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்றால் (கலாச்சாரம், அரசியலமைப்பை, நமது வரலாறு, பாரம்பரியம் நீங்கள் மாற்ற விரும்பும் போது) அனைத்துச் சாதியினருக்கும் சமமான இட ஒதுக்கீடு கொடுங்கள். இது தான் உண்மையான சமூக நீதி அல்லவா?

அனைத்து சாதியையும் ஒழியுங்கள், முதல்வரே.. திராவிடக் கழகம் இன்னும் ஒழிக்கப்படவில்லை, ஆனால் மற்ற மதத்தை அரசுக்குக் கொண்டுவருகிறது .. புத்தர் என்று அழைக்கிறார்கள், ஆனால் அவர்கள் கிறிஸ்தவத்திற்கு மாறுகிறார்கள். இப்படித்தான் நீங்கள் வெவ்வேறு மதத்திற்கு மாறி சாதியை ஒழிக்கிறீர்களா?

மத்திய அரசு EWS அறிவித்த பிறகும் நீங்கள் அதை இங்கே தமிழ்நாட்டில் அறிவிக்க விரும்பவில்லை. அனைத்து 79 FC சாதியினரையும் பழிவாங்கிய பிறகு இந்து வெறுப்பு உங்களை விட்டுச்செல்லுமா?, என்று பதிவிட்டுள்ளார். 

இதற்கு திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் காயத்ரி ரகுராம்க்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. மேடம் நீங்க கதறுவது தமிழ் நாட்டுக்கே கேட்குது. தரமான சம்பவம் வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களுக்கு என பலரும் பதிவிட்டு வருகின்றனர்.


newstm.in

Tags:    

Similar News