இரவு நேர ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் அனுமதி !!
இரவு நேர ஊரடங்கில் இவற்றுக்கெல்லாம் அனுமதி !!
இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அசுர வேகம் எடுத்து மிகத் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து மாநில அரசுகள் பாதிப்பை பொறுத்து புதிய கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் பாதிப்பு அதிகம் உள்ள கர்நாடகாவில் ஏற்கனவே கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.
கர்நாடகாவில் குறிப்பாக தலைநகர் பெங்களூரு நகர், மைசூரு, கலபுரகி, பீதர், உடுப்பி மணிப்பால், பீதர், கலபுரகி, துமகூரு ஆகிய 8 நகரங்களில் இன்று முதல் இரவு நேர கொரோனா ஊரடங்கை அமல்படுத்துவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ளது.இதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை கொரோனா ஊரடங்கு செயல்படுத்தப்படும்.இந்த கட்டுப்பாடுகள் ஏப்ரல் 20 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் அளிக்கப்பட்ட தளர்வுகள்
- இரவு நேர ஊரடங்கின்போது, நோய்களால் அவதிப்படுபவர்கள் உதவியாளருடன் மருத்துவமனைக்கு செல்ல அனுமதி
- இரவு நேரங்களில் செயல்படும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்களுக்கு தடை கிடையாது. தொழிலாளர்கள் கொரோனா ஊரடங்கு காலம் தொடங்குவதற்கு முன்னரே பணிக்கு வந்துவிட வேண்டும்.
- மருத்துவ சேவைகள் வழங்கும் மருத்துவமனைகள் மற்றும் அவசர சேவைகளை வழங்கும் அமைப்புகள் தவிர மற்ற அனைத்தும் ரத்து செய்யப்படும். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள், பொருட்களை நேரடியாக வீடுகளுக்கு வினியோகம் செய்யும் வாகனங்கள், மின்னணு வணிகம் மற்றும் அது தொடர்பான காலி வாகனங்களுக்கு அனுமதி.
- இரவு நேர பஸ், ரெயில், விமான போக்குவரத்திற்கு தடை கிடையாது.
- இரவு நேரங்களில் பயணிப்பவர்கள் டிக்கெட்களை வைத்துக் கொண்டு வீட்டில் இருந்து பஸ், ரயில், விமான நிலையங்களுக்கு ஆட்டோ, வாடகை கார்களில் பயணிக்க அனுமதி
- வணிக வளாகங்கள், மதுக்கடைகள், பல சரக்கு கடைகள், காய்கறி கடைகள், உணவகங்கள் இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும்.
- இரவு 10 மணிக்கு மேல் பொதுமக்கள் பொது இடங்களில் நடமாட அனுமதி கிடையாது. முக்கியமான சாலைகளை தவிர்த்த பிற சாலைகள் மூடப்படும்
- பஸ், ரயில், விமான நிலையங்களுக்கு செல்பவர்கள் டிக்கெட் உள்ளவர்களுக்கு மட்டும் அனுமதி.
- தனியார் பஸ்கள், ஆட்டோ-வாடகை கார்கள் ஓட அனுமதி
- இரவு 10 மணிக்கு மேல் தனிநபர் வாகனங்களுக்கு அனுமதி கிடையாது.
- கொரோனா பரவலின் தன்மையை பொறுத்து இந்த ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தீவிரப்படுத்தப்படலாம் என அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.