பொங்கல் தொகுப்பில் ஊழல் என குற்றச்சாட்டு – இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை!!

பொங்கல் தொகுப்பில் ஊழல் என குற்றச்சாட்டு – இன்று முதல்வர் முக்கிய ஆலோசனை!!

Update: 2022-01-21 06:15 GMT

பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தமிழகம் முழுவதும் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. 95 சதவிகித மக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு விட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு குறித்து சமூக வலைதளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் 500 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாக குற்றம்சாட்டினார். பரிசு பொருட்களை தரமானதாக இல்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து, பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து வரும் நிலையில், உணவுத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுடன் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.

பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் முறைகேடுகள் எதுவும் நடந்திருப்பின், இது தொடர்பாக கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

இதனிடையே, பொங்கல் தொகுப்பு விநியோகத்தில் ஊழல் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சொல்வது அப்பட்டமான பொய் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

newstm.in

Similar News