ஜகமே தந்திரம் ஓடிடி-யில் வெளியானாலும் இந்த டைம்-ல தான் ரிலீஸ் !!
ஜகமே தந்திரம் ஓடிடி-யில் வெளியானாலும் இந்த டைம்-ல தான் ரிலீஸ் !!
கார்த்தி சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஜகமே தந்திரம்’. கடந்தாண்டே இப்படத்திற்கான தயாரிப்பு பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு விட்டன. ஆனால் கொரோனா பரவல் காரணமாக படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது. இந்த கேங்க்ஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை இணையத்தில் பல கோடி பார்வையாளர்களை கடந்து பெரும் வரவேற்பை பெற்றது.
கடந்த ஆண்டு மே மாதம் வெளியாக இருந்த ஜகமே தந்திரம் திரைப்படம் கொரோனா ஊரடங்கால் நாளை (ஜூன் 18-ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இந்த படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், லால் ஜோஸ், ஆகியோர் நடித்துள்ளனர்.சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனம் வழங்க, ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படம் 190 நாடுகளில் 17 மொழிகளில் வெளியாகவுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், இத்தாலியன், பொலீஷ், போர்ச்சுகீஷ், பிரேசிலியன், ஸ்பெனீஷ் - ஜேஸ்டிலியன், ஸ்பெனீஷ் - நியூட்ரல், தாய், இந்தோனேஷியன் மற்றும் வியட்நாமீஷ் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது 'ஜகமே தந்திரம்' திரைப்படம்.
இந்நிலையில், ஜகமே தந்திரம் படம் நாளை(18 ஆம் தேதி) ரிலீஸாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ள நிலையில் இந்தியாவில் நண்பகல் 12: 30 மணிக்கும், அமெரிக்காவில் அதிகாலை 12 மணிக்கும், இங்கிலாந்தில் காலை 8 மணிக்கு, ஜப்பானில் மாலை 4 மணிக்கு இப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது